பிரபல ஹரிபவனம் நிறுவனத்தின் ‘குரோசர் சென்ட்ரல்’ சூப்பர் மார்க்கெட் துவக்கம்
கோவையைச் சேர்ந்த முன்னணி உணவக நிறுவனமான ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், உணவகத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய முயற்சியாக ‘குரோசர் சென்ட்ரல்’ (Grocer Central) என்ற நவீன சூப்பர் மார்க்கெட்டை தொடங்கியுள்ளது.
இது குறித்து ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பாலச்சந்தர் ராஜுகூறியதாவது,
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உணவகத் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். எங்கள் உணவகங்களில் எப்போதும் தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சுவையான மற்றும் சுகாதாரமான உணவுகளை வழங்கி வருகிறோம். அதே தரத்தையும் நம்பகத்தன்மையையும் தற்போது உணவுசமைக்க தேவையான பொருட்கள் மற்றும் வீட்டிற்கு பொருட்களை குரோசர் சென்ட்ரல் மூலம் நேரடியாக மக்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்.
உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, மசாலா பொருட்கள், தினசரி பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஒரே இடத்தில் தரமான முறையில் வழங்க உள்ளோம். கோவை மக்களுக்கு ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டை விட, குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் முழுமையான ஷாப்பிங் மையத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தரமான பொருட்கள், நியாயமான விலை, சிறந்த சேவை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஒருங்கிணைத்து புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்க உள்ளோம், என்றார்.
மேற்கத்திய நாடுகளின் நவீன சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இணையான உட்புற வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள குரோசர் சென்ட்ரல், சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் வளாகத்தில், இரண்டு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக 70-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
குரோசர் சென்ட்ரலில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள், தினசரி பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி தயாரிப்புகள், ஸ்னாக்ஸ், இனிப்புகள், குளிர்பானங்கள், ஆர்கானிக் உணவுப் பொருட்கள், நாட்டு மருந்து, குழந்தைகளுக்கான பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், பரிசுப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
மேலும், வாடிக்கையாளர்களின் அனைத்து அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஆரோக்கிய உணவுப் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உறைபதன உணவுப் பொருட்கள், வீட்டுத் தூய்மை பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்பட 50,000 – க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இறைச்சிக்கென பிரத்யேக பிரிவான ‘மீட் சென்ட்ரல்’-ல் மட்டன், சிக்கன், நண்டு, பிரான் போன்ற மீன் வகைகள், நாட்டுக்கோழி, சேவல், வெடக்கோழி, புறா, முயல், காடை உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் அன்றைய தினம் வெட்டி ப்ரெஷ்- ஆக விற்பனை செய்யப்படுகின்றன.
இதனுடன் ஸ்னாக்ஸ் & ஸ்வீட் ஷாப், ஐஸ்கிரீம் பார்லர், பூக்கடை உள்ளிட்ட பிரிவுகளும் செயல்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஆட்டோமேட்டிக் கார் வாஷ் வசதி, லாண்டரி சேவை, நவீன பில்லிங் வசதிகள், டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் வாடிக்கையாளர் உதவி மையம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
14.06.2026 தொடக்க நாளான அன்று மட்டும் காலை 7.34 மணி முதல் செயல்படும். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் . தாமதமாக பணியை முடித்து வீடு திரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு நீண்ட நேரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை முழுவதும் இலவச டோர் டெலிவரி சேவை , வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே கால் செய்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் ‘Grocer Central’ மொபைல் செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
தரம், நம்பகத்தன்மை, வசதி மற்றும் ஒருங்கிணைந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில், கோவை மக்களுக்கு புதிய அடையாளமாக குரோசர் சென்ட்ரல் உருவாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில்,
ஹரிபஹவனம் குழுமத்தின் தலைவர் பாலசந்தர், குரோசர் சென்ட்ரல் இயக்குனர்கள் கவிதா பாலசந்தர், ஹரிணி பாலசந்தர், பிரியங்கா ராஜு மற்றும் குடும்பத்தினர் ருக்மணி, சுப்பு லக்ஷ்மி, அங்கப்ப கவுண்டர், நண்பர்கள் சபரிநாதன் மற்றும் சுரேஷ் உடனிருந்தனர்…