கோவை

கோவையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால ஏரியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்

தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற துவக்க விழாவில் நீர்நிலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அடர்வன திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவையின் நீர்வளத்தை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், வாட்டர்டெக் இந்தியா நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன், கம்யூனிட்ரீ அமைப்பு சார்பில் தேகனி ஏரி புனரமைப்பு பணி மற்றும் கொண்டாம்பட்டியில் 10,000 மரக்கன்றுகள் நடும் நகர்ப்புற அடர்வன திட்டம் துவங்கப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தேகனி ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர், நீர்நிலைகளை பாதுகாப்பது காலத்தின் அவசியம் என்றும், மழைநீர் சேமிப்பு திறனை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் இதுபோன்ற ஏரி சீரமைப்பு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.பழமை வாய்ந்த தேகனி ஏரியின் 3.55 ஏக்கர் பரப்பளவு புனரமைக்கப்படுவதன் மூலம் சுமார் 2.8 கோடி முதல் 4.3 கோடி லிட்டர் வரை நீரை சேமிக்கும் திறன் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலத்தடி நீர் நிரப்பு, மழைநீர் தேக்கம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை மேம்படுவத்துவதெற்கென 10,000 நாட்டு மரக்கன்றுகளை நடும் பணிகள் துவங்கப்பட்டன.மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நகர்ப்புற அடர்வன உருவாக்கப்பட்டு, பசுமைப் பரப்பளவு அதிகரிப்பதுடன் காற்றின் தரம் மேம்படவும், வெப்பநிலை குறையவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வாட்டர்டெக் இந்தியா மற்றும் கம்யூனிட்ரீ அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *