கோவை,
கோயம்புத்தூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் (Sanbrix Properties), தனது புதிய வணிக மைல்கல்லான ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ (Sanbrix Business Center – SBC) வளாகத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், தரம், நம்பிக்கை மற்றும் சொன்ன நேரத்தில் திட்டங்களை ஒப்படைப்பது ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளாகக் கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனமாகும். தற்போது கோவையின் முக்கிய வணிக மையமாக வளர்ந்து வரும் நவ இந்தியா (Nava India) பகுதியில், சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய வணிக வளாகத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இது எதிர்கால வணிக வளர்ச்சிக்கான சிறந்த முகவரியாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய வணிக மையத்தின் அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (M.D) ஸ்டானி ஜோசப் பேசுகையில்,
“வாக்குறுதி அளிப்பது மட்டுமல்ல, அதைச் துல்லியமாகச் செயல்படுத்திக் காட்டுவதுதான் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளம் ஆகும். திட்டமிடல் முதல் கட்டுமானம் மற்றும் ஒப்படைப்பு வரை அனைத்து பணிகளும் எங்களது அனுபவமிக்க உள்கட்டமைப்பு குழுவினரால் நேரடியாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் திட்டங்களை எங்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிகிறது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் தரத்திலும், சொன்ன காலக்கெடுவிலும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம். சில திட்டங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த காலத்திற்கும் முன்பாகவே ஒப்படைக்கப்பட்டு அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளன,” என்றார்.

தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் குறித்துப் பேசிய சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (C.E.O) சௌமியா ராஜேஷ், “தற்போது எங்களது நிறுவனம் 5 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட கட்டுமான பரப்பளவைக் கொண்ட பல்வேறு முக்கிய திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்களின் தொழில்நுட்ப திறன், உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம் மற்றும் காலத்திற்கேற்ற ஒப்படைப்பு ஆகியவற்றின் மூலம் கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பு மற்றும் வணிக வளர்ச்சியில் சான்பிரிக்ஸ் தொடர்ந்து முதன்மையாகப் பங்களித்து வருகிறது. இந்த சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டரின் (SBC) திறப்பு விழா, எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல் மட்டுமல்லாமல், கோயம்புத்தூரின் ஒட்டுமொத்த வணிக வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை வழங்கும் வணிக மையமாகத் திகழும்,” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் (Project Manager) டேவிட் கிறிஸ்டோபர், அலுவலக மேலாண் இயக்குநர் வைஷ்ணவி திருப்பதி மற்றும் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நாளை நடைபெறும் துவக்க விழாவில் சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர் வாடிக்கையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *