தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கேரளா லாட்டரி விற்றவர் கைது.

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள பெல்லம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக மூர்த்தி (56) என்பவரை குண்டடம் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் மூர்த்தியை சோதனை செய்ததில், அவரிடம் 268 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,600 ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *