தேனியில் மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா

தேனி மாவட்டம் தேனி நகரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் முன்னிலையில் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அனைவரும் அந்தக் கட்சியிலிருந்து விலகி குறுகிய காலத்தில் துவங்கப்பட்ட கட்சியும் கட்சி துவங்கப்பட்ட முதல் சட்டமன்ற தேர்தலே மக்களின் ஆதரவை பெற்று தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையில் நடைபெற்று வரும் நல்லாட்சியை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்கிறேன் என்றார்

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சபரி ஐங்கரன் மாவட்டச் செயலாளர்கள் பிரகாஷ் லெப்ட் பாண்டி உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *