கோவையில் நடைபெற்ற அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் இணைந்து உறுப்பினர் அடையாள அட்டைகள் பெற ஆர்வம் அண்ணாமலையின் `வீ த லீடர்ஸ்’ இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
காந்திபுரம் பகுதிக்கு உட்பட்ட ராம் நகர்,சித்தாபுதூர்,காட்டூர்,மற்றும் சிவானந்தாகாலனி ஆகிய இடங்களை உள்ளடக்கி நடைபெற்ற முகாமில் இளைஞர்கள்,உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இணைய ஆர்வத்துடன் வருகை தந்தனர்..
முகாமை துவக்கி வைத்து பேசிய அண்ணாமலை ஆதரவாளர் உத்தம ராமசாமி கூறுகையில்,அண்ணாமலையின் புதிய இயக்கம் உறுப்பினர் சேர்க்கையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் துடிப்பான ஓர் இளம் தலைமையை விரும்பி, இந்த இயக்கத்தை நோக்கி வந்து இளைஞர்கள் வந்து இணைவதாக தெரிவித்தார்…
உறுப்பினர் சேர்க்கை முகாமை,கங்காதரன்,சௌந்தர்ராஜன், முருகானந்தம், ஆறுமுகம், பரமசிவம், ராம்நகர் சிவா, சபரிபாலன், விஜயகுமார், ஜி.ஜி.செந்தில், ராம்குமார், தீனதயாளன், உட்பட பலர் ஒருங்கிணைத்தனர்..