ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர்நத்தம் திருமண மண்டபத்தில் மாணிக்கம் மற்றும் பாக்கியலட்சுமி நினைவு அறக்கட்டளை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை ரகுராம் மாணிக்கம் சுரேகா ரகுராம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் அறிகுறி இல்லாமலேயே பார்வையிழப்பை தடுக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கண் நீர் அழுத்தம் கிட்டப்பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறு உள்ளவர்களை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் இந்த முகாம் ஏற்பாடுகளை ரகுராம் மாணிக்கம் சுரேகா ரகுராம் (USA)P.A.மாணிக்கம் குடும்பத்தினர் செய்திருந்தனர் மேலும் இந்த முகாமை பரணிதரன் வெங்கடேசன் பிரபாகரன் குணசீலன் ஒருங்கிணைப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *