சென்னை, ஜூன் 14:

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவொற்றியூர் வடியுடையம்மன் ஆலயம் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட தலைவர் திரு. எஸ். அருள்ராஜ் ,வட சென்னை மாவட்ட செயலாளர் திரு. எஸ். தியாகராஜன் தலைமை தாங்கினார்கள். வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் புகழேந்தி அவர்கள் முன்னிலை வகித்தனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

இந்த சமூக நலப்பணியில் மாநில பொது செயலாளர் எம்.பி. நந்தகுமார்,மாநில செயலாளர் ரவிசங்கர்,மாநில துணை தலைவர் செல்வகுமார், மாநில துணை செயலாள மாரிதேவி,
மாநில அமைப்பு செயலாளர் ஜி. சங்கரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர். ஜி. தனேஷ்குமார், மாநில பொருளாளர் எம். சரத்பாபு கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை தொண்டர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.மனிதநேயம் மற்றும் சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை, தொடர்ந்து பல்வேறு சேவைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *