சிக்கத்தம்பூர்பாளையத்தில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்
துறையூர் ஜீன் -15
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையம் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் ஜீன்-13 அன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களையவும், குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்ட வழங்கல் அலுவலரின் ஆலோசனையின் படி, துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தலைமையில் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையத்தில் உள்ள நியாய விலை கடை எண் -1ல் 13/06/2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல்,குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல்,முகவரி மாற்றம் ,கடை மாற்றம்,தொலைபேசி எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்பட சுமார் 33 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும், சில மனுக்கள் பரிசீலனை செய்தும் தீர்வு காணப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தெரிவித்தார்.
இம்முகாமில் உணவு வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், மின்கல இயந்திரம் ஆனந்த் மற்றும் விற்பனையாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் அலைச்சல் இன்றி மிக சுலபமாக தங்களது குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது என்று குடும்ப அட்டைதாரர்கள் தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்