மீன் பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கடலில் மீன் பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி துவங்கியது அன்று முதல் மீன் பிடிக்க தடைக்காலம் அமிலுக்கு உள்ளது இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வேம்பார் தருவைகுளம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீன்பிடி தடை காலத்தில் இரண்டு மாத காலமும் விசைப்படகுகளை சீர் அமைப்பு செய்தல். மீன் பிடி வலைகளை சரி செய்தால் அது போல வர்ணம் பூசுதல் அதுபோல பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
அதுபோல மீன்பிடி தடைக்காலத்தில் தூத்துக்குடி கடல் பகுதியில் கேரளா விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வருகிறார்களா மீன்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்கவும் படுகிறது. இந்த நிலையில் மீன் பிடி தடைக்காலம் இன்று 14ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் அதற்கான பணிகள் தற்போது கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
பராமரிப்பு பணிகள் முடிந்த விசைப்படகுகள் கடந்த மூன்று நாட்களாக இயந்திரம் சீராக இயங்குகிறதா என்று விசைப்படகுகளை சோதனை ஓட்டம் நடத்தி சரிபார்த்து வருகின்றனர். அதனை அடுத்து திங்கட்கிழமை அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர் அதனை முன்னிட்டு விசைப்படகுகளில் டீசல் நிரப்புவதற்கான பணிகளும் நிறைவடைந்து உள்ளது
மேலும் ஐஸ் கட்டி உள்ளிட்ட பொருட்களை விசைப்படகுகளில் வாங்கி வைக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவில் மீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதன் மூலம் விளையும் குறையும் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ஒவ்வொரு ஆண்டு தடைக்காலத்தின் போதும் விசைப்படகு பல்வேறு வகைகளில் பராமரிப்பு செய்யப்படுகிறது அதன் மூலம் ஒவ்வொரு விசைப்படகும் சுமார் 5 லட்சம் முதல் 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது