பொதுமக்கள் புகார். விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டார். உடனடி நடவடிக்கை.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று முடிந்து முன்பு நகராட்சியாக இருந்த வார்டுகள் எல்லாம் தற்போது பாதாள சாக்கடை மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 11 மணி அளவில் போல்டன் புறம் பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடை வழியாக கழிவு நீர் செல்லவில்லை அடைப்பு உள்ளது என்று பொதுமக்கள் மேயர் ஜெகனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனை எடுத்து தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் உடனடியாக அப்பகுதிக்கு வருகிறேன் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் போல்டன் புரம் பகுதிக்கு உடனடியாக நேரில் சென்றார் அங்கு தகவல் தெரிவித்த பொதுமக்களிடம் விபரங்களை கேட்டு அறிந்தார். உடனடியாக பாதாள சாக்கடைக்கு போடப்பட்டு இருக்கும் மூடிகளை திறக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார் அப்போது பாதாள சாக்கடையில் காலிவு நீர் செல்லாமல் தேங்கியிருப்பதை பார்த்த மேயர் உடனடியாக முழுவதும் சரி செய்ய வேண்டும் உடனடியாக மின் மோட்டார் மூலம் பைப் லைன் அமைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற வேண்டும்

அதன் பிறகு உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் உடனடியாக பணிகளை ஆரம்பித்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று மேயர் ஜெகன் உத்தரவிட்டார் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த இடத்தில் குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு செல்கிறது என்று கூறினார் உடனடியாக அதிகாரியில் வரவழைத்து அந்த இடத்தில் உள்ள அடைப்பை சரி செய்ய பணிகளை துவக்கி வைத்தார்

அதன் பிறகு அதன் அருகில் மாநகராட்சி உரக்கடங்குக்கு செல்லும் பாதை ஒன்று சரி செய்யாமல் இருந்தது உடனடியாக அந்தப் பாதையை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு ஏற்கனவே லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து அப்பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது அந்தப் பணிகளுக்கும் மேயர் ஜெகன் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்

அப்போது எதன் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒப்பந்தக்காரரிடம் மேயர ஜெகன் கேட்டறிந்தார். அப்போது பாதாள சாக்கடை உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பழுதாகி இருக்கும் அதன் மூலம் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது உடனடியாக உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டாரை வெளியே எடுத்து சரி செய்ய வேண்டும்

தற்காலிகமாக ஒரு மின்மோட்டாரை வைத்து பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பார்கள் என்று மேயர் ஜெகன் கூறினார்

பணிகள் உடனடியாக நடைபெற்று வருகிறது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மே ஜெகன் உத்தரவிட்டார் தினசரி வந்து பார்வையிட வருவேன் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என்று கூறினார் அதன் பின்பு மாரியம்மன் கோவில் அருகில் 20 வருடங்களுக்கு மேலாக போடப்படாமல் இருந்த சாலை பொதுமக்களின் கோரிக்கை எடுத்து பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது

அந்தப் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த பல மேயர்களிடம் கோரிக்கை வைத்தோம் நிறைவேற்றவில்லை நீங்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு சாலை அமைத்து தருகிறீர்கள் மிக்க நன்றி என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

அதற்கு மேயர் ஜெகன் மக்கள் பணி செய்வதற்கு தான் முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் அதன்படி அந்தப் பணியை உங்களுக்கு நான் செய்கிறேன் என்று மேயர்ஜெகன் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்று பாதாள சாக்கடை அடைப்பு பணிகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் உடன் மாநகராட்சி அதிகாரிகள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பிரபாகர்.ஜேஸ்பார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *