அலங்காநல்லூர்.
ஜுன்.16 –
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் தனிச்சியம் கிராமத்தில் நெற்பயிர்களில்
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள் விரிவாக்கப் பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் 16.06.2026ம் தேதி அன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் நெற்பயிரிடும் 100 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் வேளாண்மை உதவிஇயக்குநர் பெ.தெய்வேந்திரன்; விளைநிலம் பாதுகாப்போம
; இயக்கம் முர்நுவு டீயுஊர்யுழுயுடீர்ஐலுயு கேத் பச்சோ அபியான இயக்கத்தின் மூலம் ; இயற்கை விவசாயம் மற்றும் மண்வள பாதுகாப்பு விவசாயிகள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில்
எடுத்துக் கூறியதாவது சமச்சீரான உரப்பயன்பாட்டை மேற்கொள்வதன் மூலம் நிலையான வேளாண்மையை ஊக்குவித்தல்,மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்,மண்வளம் மற்றும் சமச்சீரான உரப்பயன்பாட்மை மேற்கொள்வதன் மூலம் சாகுபடி செலவை
குறைப்பது,காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது,பசுந்தாள் உரப்பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். மதுரை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பேராசிரியர் மற்றும் தலைவர் சுரேஷ திருந்திய நெல் சாகுபடி முறைகளான நிலத்தேர்வு, 2கிலோ குறைவான விதையளவு, உயிரியல் பூஞ்சாண நோய் கட்டுப்பாடு விதை நேர்த்தி,ஒரு செண்ட் நாற்றங்கால்,12-14 வயதுடைய இளநாற்றுகள் நடவு செய்தல், 22.5ஒ22.5 செ.மீ இடைவெளி சதுர முறையில் ஒற்றை நாற்று நடவு, பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, கோனோவீடர் மூலம் களை நிர்வாகம், இலைவண்ண அட்டை கொண்டு தழைச்சத்தை தேவைக்கேற்ப பிரித்து இடுதல், நீர் மறைய நீர் கட்டுதல், நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் அதிகம் காணப்படுவதால் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாக முறைகளான
இயற்கை முறைகளான பஞ்சகாவ்யம் , வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பு, மஞ்சள்; வண்ண அட்டை,விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறி பயன்படுத்துவதோடு இயற்கை திரவ உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ரைசோபியம் ஆகியவற்றினை பயன்படுத்துமாறும்
முக்கியமாக விவசாயிகள் அனைவரும் சான்றுபெற்ற விதைகளை பயன்படுத்துமாறும் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றிடலாம்; என தொழில்நுட்பக் கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விவசாயிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலுரை தெரிவித்தார்.
அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை அலுவலர் வசந்தகுமார், விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் (குயசஅநச சுநபளைவசல), பாரத பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம், நுண்ணீர்ப் பாசன திட்டம், மத்திய மாநில அரசின் மூலமாக கிடைக்கும் மானியத் திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார்கள் ;. மேலும் உதவி வேளாண்மை அலுவலர் பால்பாண்டி, வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் மானியத்திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
விவசாயிகள் மகாம் முடிவில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்த தொழில்நுட்ப கருத்துக்கள் அடங்கிய பயிற்சி கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விஞ்ஞானிகள் விரிவாக்கப்பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாமில் நெற்பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பேரணி நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப உரையாற்றிய அலுவலர்களுக்கும் அலங்காநல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளாகள்
சௌந்தராஜன், மற்றும் வசந்தி, ஆகியோர் செய்திருந்தனர்.