தமிழ் மதுரை அறக்கட்டளையின் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் ஜூன் 16.06.26 அன்று இணைய வழி நேரலையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இயற்கை யாருடையது எனும் தலைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தலைமை ஏற்று கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன், நிறுவனர், தலைவர், தமிழ் மதுரை அறக்கட்டளை நிகழ்வினை தனது தலைமை உரையோடு தொடங்கி வைத்தார். முனைவர் தா. தினேஷ், சங்கப்பலகை ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயற்கை யாருடையது எனும் தலைப்பில் தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற க அசோக்குமார் அவர்கள் இன்றைய நிலையில் இயற்கை பாதுகாப்பு பற்றியும் நெகிழி ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து நன்றியுரை முனைவர் சா. சே. ராஜா, செயலர் தமிழ் மதுரை சங்கப்பலகை அவர்கள் வழங்கினார். இந்த நேரலை நிகழ்வில் தமிழ் மதுரை அறக்கட்டளை நிருவாகிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *