வேப்பூர் ஜுன் 16
தமிழக அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சேரன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்
தமிழக அரசு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு பள்ளிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்
அவர்கள் அடுத்து வந்த அதிமுக ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என சுமார் 13 ஆண்டுகளாக நிரந்தரம் செய்யக்கோரி அடிக்கடி சங்கம் அமைத்து போராடி வருகின்றனர்
பணி ஓய்வு இறப்பு என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகி ட தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
இவர்களை தற்போதுள்ள முதலமைச்சராக உள்ள விஜய் அரசு தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக பணியாற்றும் சேரன் என்பவர் அனைத்து தற்காலிக ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரி பள்ளி எதிரில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்
அதனை தொடர்ந்து வேப்பூர் போலீசார் வருவாய் துறையினர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் டவரிலிருந்து இறங்காததால் வேப்பூர் தீயணைப்பு துறையினர் டவர்மீது ஏறி சேரனை கயிறுகட்டி கீழே இறக்கி வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்கு சேர்த்து சிசிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பு வைத்தனர் இதனால் சுமார் 3 மணி நேரம் வேப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது