தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டம்.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்கள் நலன் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் செங்கோடம்பாளையம் எல்லப்பாளையம்புதூர் வடசின்னரிபாளையம், குருக்கபாளையம், பெருமாள்பாளையம் மற்றும் ஆராத்தொழுவு ஆகிய ஊராட்சிகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) பிரியா மற்றும் ஆலமுத்து ஆகியோரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். அவருடன் குண்டடம் முன்னாள் சேர்மேன் குப்புசாமி, செந்திகுமார், சிவபாலு மற்றும் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு துறைகளின் பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *