ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் ஸ்ரீ வித்யா நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.P.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. G.தனேஷ்குமார், மாநில பொருளாளர் திரு.M . சரத்பாபு, வட சென்னை மாவட்ட செயலாளர் திரு. S.தியாகராஜன், வடசென்னை மாவட்ட துணை தலைவர் J.புகழேந்தி முன்னிலை வகித்தனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் வடக்கு மாட வீதி சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் , அங்கு கடைகள் மற்றும் சிறு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. சுமார் 500 நபர்கள் நீர் மோர் வாங்கி அருந்தினார்கள்.

இந்த சமூக நலப்பணியில் மாநில பொது செயலாளர் எம்.பி. நந்தகுமார்,மாநில செயலாளர் ரவிசங்கர்,மாநில துணை தலைவர் செல்வகுமார், மாநில துணை செயலாள மாரிதேவி,
மாநில அமைப்பு செயலாளர் ஜி. சங்கரன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை தொண்டர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.மனிதநேயம் மற்றும் சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு சேவைகள் மற்றும் நலதிட்ட உதவிகளையும் , முன்னெடுத்து வருவதாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *