தேனி அல்லிநகரம் நகராட்சி அறிவு சார் மையத்தில் மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடல் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தில் தேனி மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினார் இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி. குணசேகரன் மேலாளர் முனிராஜ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்