கும்பகோணத்தில முதல்வர் பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம்
முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் தமிழக வெற்றி கழகம், லயன்ஸ் கிளப் ஆஃப் குடந்தை கிங்ஸ் ஆகிய இணைந்து நடத்திய இலவச பல் ,கண்,காது மூக்கு தொண்டை மற்றும் குடல் நோய் சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமை ஏ ஆர் ஆர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.
முகாமுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான வேளாண்மை துறை அமைச்சர் வினோத் ரவி துவக்கி வைத்தார்.கும்பகோணம் மாநகர மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ் பிரகாசம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குரு பிரசாத் ஆகியோர் தலைமையில் ராஜராஜன்,அசாருதீன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில் கண் நோய்கள், சா்க்கரை வியாதி, பல், தோல், சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.
“இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்