பொள்ளாச்சி
ஜூன் 22
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு கோவை திருப்பூர் மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ர் கலந்து கொண்டனர் மாநாட்டில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நித்தியானந்தம் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அதைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த அரசியல் கட்சியினர் ஆளுங்கட்சிக்கு சென்று விட்டார்கள் சேர்ந்தவர்கள் தற்போது தடுமாற்றத்தோடு இருக்கிறார்கள் அந்த தடுமாற்றம் ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி. அதே மாதிரி முக்கியமான விமர்சனம் என்று சொன்னால் திமுக கூட்டணியில் இல்லை என்று சொல்லலாம் ஆனால் திமுக கூட்டணியே தமிழ்நாட்டிலே இல்லை என்று சொல்லக்கூடாது அது தவறு என்று அவர்களே புரிந்துள்ளார்கள் தற்போது மக்கள் மத்தியில் ஆளுங்கட்சியினர் பாலியல் சம்பவத்தில் ஈடுபடுவது மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது
சட்டம் ஒழுங்கை உடனடியாக சரி செய்து இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து எப்போது வேண்டுமென்றாலும் பேசலாம் சிறு குழந்தைகள் பாலியல் சம்பவங்களுக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இந்த பாலியல் பலாத்கார நிகழ்வுகள் இன்றைக்கே நிறுத்தப்பட வேண்டும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்
மேலும் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நித்தியானந்தம் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
நிகழ்ச்சி ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்