பொள்ளாச்சி-
ஜூன்-22
தமிழகம் முழுவதும் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் பொள்ளாச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஜி இராமநாதன் தலைமையில் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவம் ரத்ததானம் முகாம் நடைபெற்றது
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் மேலும் முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடத்தப்படுவதாக ஜி.ராமநாதன் தெரிவித்தார் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்