முள்ளிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் மருத்துவ முகாம்


கல்பாக்கம் ஜூன் 22
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 21ம் தேதி ரியல் அறக்கட்டளை, க்ளெனேகிள்ஸ் குளோபல் (பல்நோக்கு) மருத்துவமனை உதவியுடன் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட த வெ கழக கட்சியின் மாவட்ட செயலாளர் தையூர் தினகரன் தலைமை தாங்கினார் திருப்போரூர் தெற்கு ஒன்றியம் டாக்டர் சக்திவேல் மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

இந்த முகாமில் க்ளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் ஆனந்த்,ஜெயா சூர்யா, பணியாளர்கள் நாகப்பா, சந்திரன்,சந்தோஷ் குமார், பல் மருத்துவம் பிரேமலதா, மேலாளர்கள் மகிமைதாஸ், ஜாகிர் பாஷா, வினோத், மேகலா, யுகானந்தன், ரியல் அறக்கட்டளை மணிகண்டன், மலர்விழி,அஞ்சலி, சித்ரா மொபைல் நம்பிக்கை மையம் அர்ச்சனா, தன்னார்வலர்கள் நிஜன்தன்,உதயா, வெங்கடேசன், சண்முகம், அபிஷேக், மணிகண்டன், ராஜ்குமார், பிரகாஷ், அசோக், ரோகித், கிஷோர், முரளி, வினோத், தேவி, கீதா பணியாற்றினர் முகாமில் பொது மருத்துவம், கண் சிகிக்சை,பல் மருத்துவம், எச். ஐ. வி, பால்வினை நோய், மஞ்சள் காமாலை, கல்லிரல் அழற்சி, சிகிக்சை அளிக்கபட்டது. 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் பொதுமக்கள் இரத்தம் தானம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *