கோவையின் வலி மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, கோவையில் முதன் முறையாக பிரத்யேக வலி சிகிச்சை மையமான ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ (Resilio – The Pain Clinic),எனும் மையம் துவங்கப்பட்டது..
கோவை ஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் சாலையில் துவங்கபட்டுள்ள இதற்கான துவக்க விழாவில்,, ஆக்சான் அனஸ்தீஷியா அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், ஹைதராபாத்திலுள்ள கேர் மருத்துவமனைகளின் கிளினிக்கல் இயக்குநருமான டாக்டர் கோபால் கிளினிக்கைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து , ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’ மையத்தின் செயல்பாடுகள் நிகழ்ச்சி மற்றும் ‘வலியற்ற கோவை’ (PAIN FREE KOVAI) விழிப்புணர்வு நிகழ்வு ஆர்.எஸ்.புரம், கிழக்கு பெரியசாமி சாலையிலுள்ள ராஜஸ்தானி நிவாஸில் நடைபெற்றது.
இதில் பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் (ADGP) ஓய்வு பெற்ற காவல் துறை அதிகரியான பாரி, கலந்து கொண்டு அறுவை சிகிச்சையில்லாமல் உடல் ஆரோக்கியத்தை காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற நவீன வலி மேலாண்மை முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கில், ரெசிலியோ தி பெயின் கிளினிக்கின் நிறுவனரும், முன்னணி வலி மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் செந்தில் பிரகாஷ் மோகன் பேசினார்..
அப்போது பேசிய அவர், முழங்கால் வலி, முதுகுவலி, மூட்டு தேய்மானம், இடைமுதுகு தட்டு விலகல் (Slipped Disc), நரம்பு சார்ந்த வலி புற்றுநோய் தொடர்பான வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளின் அடிப்படை காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் உடல் செயல்திறனை மீட்டு, ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும்” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஹரி நிஷாந்த் , இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர் ஷஜிதா பேகம் நைனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…