தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், ஜூன்- 23.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்த
போராட்டத்தின் கோரிக்கையாக தேர்தல் தமிநாடு முதலமைச்சர் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மணி, பாட்ஷா என்ற ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சௌந்தர்ராஜன், மாநகர செயலாளர் அறிவு, ஊடகப்பிரிவு கபிலன், பாண்டி மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.