செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் மோட்டார் வெளிச்சம் சர்வீஸ், சி எம் டி ஏ. ட்ரக் டெர்மினல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ. லாரி நிறுத்தத்தில்,மோட்டார் வெளிச்சம் சங்க தலைவரும் சி எம் டி ஏ. லாரி நிறுத்த உரிமையாளர்கள் சங்க தலைவரும், டிரான்ஸ்போர்ட் அண்ட் ஏஜெண்டுகள் சங்க தலைவருமான லயன் ஜெயக்குமார் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை ஐஜி ராமசுப்பிரமணியன், காவல்துறை உதவி ஆணையாளர்( ஓய்வு )ராஜேந்திரராஜா ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதில் நலிவுற்ற 5 மாணவ மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, வாகன ஓட்டுனர்களுக்கு இலவச காக்கி சீருடை மற்றும் 1000 பேருக்கு அன்னதானம், நீர் மோரை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினார்கள்.

முன்னதாக ஹியூமன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.

இதில் அரிமா சங்க மாவட்ட கவர்னர் மணிசேகர், நரசிம்மன், ஜெயக்கொடி, பிரைடு பிரபாகர், பரணிதரன், இளைய பாரதி மகளிர் அரிமா சங்கத்தை சேர்ந்த ரேணுகா தேவிஜெயக்குமார், சுனிதா, இந்திரா, ஜெயராணி உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *