கோவை த.வெ.க.புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில், -இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் பல்வேறு இடங்களில் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் கட்சியினர் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினார்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அந்த குழந்தைகளுக்கு நினைவுப் பரிசாக தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து சூலூர் பகுதியி்ல் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,52 திருநங்கைகளுக்கு புடவைகள்,மற்றும் ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரம்,வழங்கப்பட்டது..

இதே போல நாள் முழுவதும் ஐந்து இடங்களில் அன்னதானம்,வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில்,செந்தில்,சரவணன்,தாமோதரன்,சசிகலா,விமல்,ரபி,சம்சு,சூலூர் கணேஷ் உட்பட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *