திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் திரு.K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது.

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் திரு.கார்த்திகேயன் தனது அக்கா கணவர் திரு.அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிடம் வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்த தரக்கோரி பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் திரு.மாரியப்பனை அணுகியபோது, ரூ.25,000/- லஞ்சம் கேட்டு, புகார்தாரர் கார்த்திகேயன் வேண்டுகோளுக்கிணங்க ரூ.15,000/-ஆக குறைத்து கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் கார்த்திகேயன் 23.06.2026ந் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 23.06.2026ந் தேதி துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன், ஆய்வாளர்கள் திரு.பிரசன்ன வெங்கடேஷ், திருச்சக்திவேல் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் திரு.மாரியப்பன் லஞ்சப்பணம் ரூ.15,000/-ஐ திரு.கார்த்திகேயனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *