ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாள் ஜமாபந்தி முகாமில் 182 மனுக்கள் பெறப்பட்டன:-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத் தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 3ஆம் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டதுடன்,பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை தொடர்பான பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 182 கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் சி,பன்னீர்செல்வம் பெற்றுக்கொன்டார்.

மேலும் சயனபுரம் கிராமத்தின் வளர்ச்சியை பணிகள் சயனபுரம் டு பல்லூர் தார்சாலை, மருத்துவமனை கட்டிடம், ஏரி தூர்வாருதல், கொசஸ்தலை ஆற்றின் கழிவுகளை நீக்குதல், ஏரி கால்வாய் 4 கிமீ தூர் வாருதல்உள்ளிட்ட கோரிக்கைகளை நெமிலி கிழக்கு ஒன்றிய பாமக செயலாளர் கதிரவன் தலைமையில் ஊர் மக்கள் ஜெயவேலு, அரிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் முன்னிலையில் மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் நெமிலி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் அருள்செல்வம், தனித் துணை வட்டாட்சியர் சரஸ்வதி, தேர்தல் அலுவலர் சுந்தரம்,வட்ட வழங்கல் அலுவலர் மருதாச்சலம், கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் பூபாலன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *