ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
நெமிலியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி கடன் பெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-
ராணிப்பேட்டை மாவட்டம் நிமிடத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசே வலியுறுத்தி கடன் பெற்ற விவசாயிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி யில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை பொறுப்பினை வகித்தார் உதயகுமார் மாநில பொதுச் செயலாளர் மேலும் முன்னிலை வகித்தார்கள் ஆர்பி ரவீந்திரன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி ராமலிங்கம்,சி எஸ் மணி விகே 7:00 மணி எஸ்ஜிசி பெருமாள், மேலப்புலம் பிரகாசம், கீழ்வீதி சம்பத், உள்ளிட்ட நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்,சுபாஷ் மாநில பொருளாளர் கண்டன உரையை துவக்கி வைத்து ஊர்வலமாக 300க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் திருவோடு ஏந்தி வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்தார் அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர் இந்த ஆர்ப்பாட்டம் நெமிலியில் சற்று நேரம் அனைவரும் கவனத்தை இருக்கும் வகையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்ட முடிவில் அன்பரசு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டினார்.