2 லட்சம் மதிப்பில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார் மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது ஏற்பட்டால் அதனை பராமரிப்பதற்கு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்து விட்டது இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் 22 லட்சம் மதிப்பில் புதியதாக தெரு விளக்கு பராமரிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது அந்த வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் பிரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் தெரு விளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார்.
இந்த அந்த வாகனத்தை இயக்குமாறு பணியாளருக்கு உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த தெரு விளக்கு பராமரிப்புக்கான கிரேன் எவ்வளவு உயரம் உயர்த்த முடியும் நான்கு பக்கமும் சுற்ற முடியுமா என்று மேயர் ஜெகன் கேட்டார்
அதற்கு பணியாளர் சுமார் 40 முதல் 50 அடி வரை உயரம் வரும் நான்கு பக்கமும் எந்த திசைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பணியாளர் கூறினார்
வாகனத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பாதுகாப்பான முறைகள் நின்று தெரு விளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார் நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ரவீந்திரன். சுரேஷ்குமார். மாமன்ற உறுப்பினர் கனகராஜ் போல்பேட்டை பகுதி திமுக நிர்வாகி பிரபாகர். ஜேஸ்பார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தன