தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் வழங்கினார் .
முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சரத்குமார் தங்க மோதிரம் அணிவித்து, பழங்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களை வழங்கினார்.
மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த 38-க்கும் மேற்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வழங்கி வாழ்த்தினார்.