தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை.!

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்திற்குட்பட்ட கொழுமங்குளி ஊராட்சி பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, கொழுமங்குளி ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலமுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நீண்டகாலமாக குடிநீர் விநியோகம் நடைபெறாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், இரண்டு நாட்களுக்குள் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டு வழங்கப்படாவிட்டால், ஊர் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *