மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது இதில் 850 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்,
மேலும் இப் பள்ளி மாணவர்களுடன் கலாச்சார பரிவர்த்தனைக்காக ஜெர்மனியில் இருந்து வந்திருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யோகப் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியின் பொழுது சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் உள்ளிட்ட பல்வேறு யோகாசன பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர் சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன் தலைமை தாங்கினார் மேலும் பள்ளி முதல்வர் டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் துணை முதல்வர் டாக்டர் சக்திவேல் , உடற்கல்வி ஆசிரியர் திரு வெள்ளியங்கிரி உட்பட ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்