மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்:-
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது.
இதைடுத்து கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை முதல்கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி விமான கும்பத்தை அடைந்து,
விமான கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.