மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
குத்தாலம் அருகே கங்காதாரபுரத்தில் ஒரே நேரத்தில் 5 கோவில்கள் கும்பாபிஷேகம்.

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்களா அம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பெருமாள் மற்றும் ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் ஆகிய ஐந்து கோயில்கள் கும்பாபிஷேகம் ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கங்காதரபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மன்மதீஸ்வரர், ஸ்ரீ பூர்ண புஷ்களா அம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்திரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ பெருமாள் மற்றும் ஸ்ரீபிரசன்ன மாரியம்மன் ஆகிய ஐந்து கோயில்களின் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் திருப்பணிகள் செய்து யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 22 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று நான்காம் காலயாகசால பூஜை நிறைவுற்று பூரணஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோவில்களை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.