கோவை வீரசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சவுத் மற்றும் சி.ஜி-வாக் சாப்ட்வேர் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் திறப்பு விழா நடைபெற்றது.
கல்விச்சோலை எனும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவிற்கு சி.ஜி-வாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் தலைமை வகித்து புதிய வசதிகளை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2026-27 மாருதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர் இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளியில் புதிய உணவுக்கூடம், ஸ்மார்ட் வகுப்பறை, பவர் பிளாக் தரைத்தளம், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், விளையாட்டு மைதான மேம்பாடு, முழு வளாக மேற்கூரை அமைப்பு, கை கழுவும் வசதி புதுப்பித்தல், முன்பகுதி தரைத்தளம் மற்றும் நுழைவாயில் சீரமைப்பு, கதவுகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் பொன்ராஜ், செயலாளர் வேலுசாமி, திட்டத் தலைவர் கல்யாண்குமார், இணைத் தலைவர் பன்னீர்செல்வம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சுப்ரமணியம், சி.ஜி-வாக் நிறுவனத்தின் நிதி அலுவலர் சுப்ரமணியன், நிறுவன செயலாளர் ஹர்சரண் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி தலைவர் சி.ஆர். நம்பி, தலைமையாசிரியர் ஜெயக்குமார்,மற்றும் ரோட்டரி மூத்த நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தையும், பாதுகாப்பையும், சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கல்வி வளர்ச்சிக்காக செயல்படுவதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.
பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள், இந்த வசதிகளை வழங்கிய ரோட்டரி கிளப் மற்றும் சி.ஜி-வாக் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.