கோவையில் ஸ்டைலோரி; தனது முதல் கிளையை துவக்கியுள்ளது புதிய கிளையை பிரபல நடிகை சஞ்சனா திறந்து வைத்தார்

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான என்ஏசி ஜுவெல்லர்ஸின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கொங்கு மண்டலத்தில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவை ஆர். எஸ். புரத்தில் முதல் விற்பனை மையத்தை துவக்கியுள்ளது.மூன்றாவது சில்லறை விற்பனை மையமான புதிய கிளையை நடிகை சஞ்சனா ஏ.கே. திறந்து வைத்தார்.

ஆர். எஸ். புரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தில், சான்றளிக்கப்பட்ட 92.5 வெள்ளி ஆபரணங்கள், ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஆய்வக வைரங்கள் மற்றும் பி ஐ எஸ் ஹால்மார்க் பெற்ற 9 காரட் தங்க ஆபரணங்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, ஸ்டைலோரி மற்றும் நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் என்ஏசி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த ராமானுஜம் தெரிவித்தார்..

சான்றளிக்கப்பட்ட வெள்ளி, ஆய்வக வைரங்கள் மற்றும் 9 காரட் தங்க ஆபரணங்களை ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம், வடிவமைப்பு, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்கும் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்” என்றார்.

மேலும், அறிமுகக் கால சலுகையாக ஒவ்வொரு கொள்முதலுக்கும் இலவச தங்க நாணயம் வழங்கப்படுவதுடன், கடைக்கு வருகை தரும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆபரணங்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் கூறினார்..

நிகழ்ச்சியில் பேசிய நடிகை சஞ்சனா ஏ.கே., “வெள்ளி, ஆய்வக வைரம், தங்க ஆபரணங்கள் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டைலோரி தயாரிப்புகள் உள்ளன.

வடிவமைப்பும், விலை நிர்ணயமும் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன” என்றார்.துவக்க விழாவில், என்ஏசி ஜுவெல்லர்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அனந்த பத்மநாபன், வாடிக்கையாளர்கள்,மற்றும் ஸ்டைலோரி, என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,கோவை ஹோம் அமைப்பின் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் 15 மாணவர்களின் பள்ளிக் கட்டணத்திற்காக ரூ.5 லட்சம் நிதியுதவியை ஸ்டைலோரி வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *