ஏழு வயதில் கணிதத்தில் அசத்தல்…சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி

கணிதத்தில் அபார நினைவாற்றல் மற்றும் வேகமாக கணக்கிடும் திறனை வெளிப்படுத்தி, ஏழு வயது சிறுவன் இளங்காமணி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

கோவை ராமநாதபுரம் ஒலிம்பஸ் பகுதியில் உள்ள பிரேவ் ஃபிட் அகாடமி சார்பாக நடைபெற்ற உலக சாதனை முயற்சியில், ஏழு வயதான இளங்காமணி கலந்து கொண்டார்.

இதில், மூன்று இலக்க எண்கள் அடங்கிய 10 அட்டவணைகளுக்கான விடைகளை எழுதி முடித்ததுடன், நான்கு இலக்க எண்ணை மூன்று இலக்க எண்ணால் பெருக்கும் 10 கணக்குகளுக்கும் விடை அளித்து, தனது கணிதத் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த சாதனையை 9 நிமிடங்கள் 33 விநாடிகளில் செய்து முடித்ததே சிறுவனின் சாதனை முயற்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.மேலும், கணிதக் கணக்குகளில் மட்டுமின்றி, 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் வழங்கப்படும் எந்தவொரு பிறந்த தேதிக்கும், அந்த தேதி எந்த கிழமையில் வருகிறது என்பதை கண்டறியும் திறனையும் சிறுவன் வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுவனின் இந்த சாதனையை அங்கீகரித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் சாதனை பதிவு செய்யப்பட்டது…

சிறு வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் கொண்டு, கடினமான கணக்குகளையும் குறுகிய நேரத்தில் தீர்க்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ள இளங்காமணியின் சாதனை, மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேக நிமிலன் தெரிவித்தார்..ஏழு வயதிலேயே உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இளங்காமணிக்கு மாஸ்டர் பாலமுரளி கிருஷ்ணன்,மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *