அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டங்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி தண்டபாணி தொமுச மாவட்ட செயலாளர் பி வி அன்பழகன் எச் எம் எஸ் சார்பில் திருவள்ளுவர் ஐஎன்டி யூசி சார்பில் சின்னசாமி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

தொழிலாளர்களுக்கு பாதகமாக பெரு முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசு திருத்திய 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்கிட வேண்டும் தமிழ்நாட்டில் தேங்கியுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள் முடங்கியுள்ள முத்தரப்பு குழுக்கள் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மோடி அரசின் சட்டத்தால் முடங்கும் நிலை தீர்வு கண்டிட தமிழக அரசே முன் வந்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல தொமுச செயலாளர் நாராயணன் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச பொருளாளர் சித்திரவேல் ஏ ஐ டி யு சி அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *