தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள், கோவளம் பசுவந்தரை தண்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டா நிலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண், பெண் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் மூலம் சுமார் 3000 ஏக்கர் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்கபட உள்ள நிலையில், உப்பு உற்பத்தியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உப்பள தொழிலாளர்கள் மீனவர்கள் ஆகியோர் தமிழக வெற்றி கழக அரசு கப்பல் கட்டும் தளத்தை எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொண்டு வரக்கூடாது கப்பல் மட்டும் தளம் அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில்,

இன்று, உப்பு தொழிலை மீன்பிடி தொழிலை அழித்துவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *