தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 675 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 675 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 675 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 2.05.900 மதிப்பிலான மின் கலந்தால் இயங்கும் செயற்க்கைக் கை மற்றும் ரூபாய் 2340 மதிப்பிலான ஊன்று கோலை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் வழங்கினார் .
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது தனித்துணை ஆட்சியர் கவிதா மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.