தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா மேயர் ஜெகன் களத்தில் இறங்கினார்.
தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது மூன்று நாட்கள் நடைபெற இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அமர்ந்து திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர்
கோவில் வளாக பகுதியில் முள் செடி. மணல் திட்டு குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகனிடம் கோரிக்கை வைத்தனர் அப்போது நிர்வாகத்தினரிடம் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார் அதன் அடிப்படையில் வியாழக்கிழமை காலை மாநகராட்சி மேயர் ஜெகன் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல ஆலயத்திற்கு சென்றார் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் இடம் மேயர் ஜெகன் கேட்டறிந்தார்
உடனடியாக மாநகராட்சி ஜேசிபி இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது அதுபோல தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டது உடனடியாக ஆலய வளாகப் பகுதியில் தேங்கி கிடந்த மணல் திட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது.அதுபோல ஆலய வளாகப் பகுதியில் இருந்த முள் செடி முழுவதும் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு ஆலய வளாகப் பகுதி முழுவதும் சமப்பகுதியாக அமைக்கப்பட்டது அதுபோல ஆலயத்துக்கு வரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்திலும் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது
திருவிழா நடைபெறும் மூன்று நாட்களும் மாநகராட்சி பணியாளர்கள் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவார்கள் அது போல குப்பைகளை போடுவதற்கு இரண்டு பெரிய ட்ரம் வைக்கப்படும் என்று மேயர் ஜெகன் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
ஆலய வளாகப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்படும் வரை மேயர் ஜெகன் அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் பகுதிச் செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ் . திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன்.திமுக மீனவர் அணி நிர்வாகி டேனி போல் பேட்டை திமுக நிர்வாகி பிரபாக ர் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஹரி கணேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆலய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.