தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நல்லிமடத்தில் கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்.!

திருப்பூர் மாவட்டம்
குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லிமடம் கிராமத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் வேட்பாளர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு அணி சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அணி நிர்வாகி செந்தில்குமார், மாவட்ட கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு அணி நிர்வாகிகளான லட்சுமணன், சுகன்யா, ஈஸ்வரமூர்த்தி, சசிக்குமார்.மாதவன்.
செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

முகாமில் மொத்தம் 83 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், 13 பேர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்து மனிதநேய சேவையில் பங்கேற்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சமூகநல முகாம் நல்லிமடம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களிடையே வரவேற்பைப்
பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *