திருச்சி காந்தி மார்க்கெட் – தஞ்சாவூர் பால்பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றத்தில் தொடர்ந்து சட்டம்–ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெற்று வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாளிடம் பாமக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.மேலும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனியார் மனமகிழ் மன்றத்தில் 19 வயது இளைஞருக்கு மது விற்பனை செய்யப்பட்டதாகவும், அங்கு ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் காயமடைந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட், தாராநல்லூர், பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட செயல்கள் நடைபெறுவதாகவும், அவற்றை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் மனு மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என பாமக சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பேட்டி – திலீப்குமார் – திருச்சி பாமக தெற்கு மாவட்ட செயலாளர்

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *