தஞ்சாவூர் மாவட்டம்:
கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மாபெரும் முகவர்கள் சங்கமம் 2026 நிகழ்ச்சி ஹோட்டல் டைமண்ட் மினி மஹாலில் நேற்று நடைபெற்றது.முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஏ.வி.ஆர் மருத்துவமனை சார்பில் நுரையீரல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
தொடர்ந்து திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் சார்பில் உடல் தானம் மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஏராளமான முகவர்கள் படிவங்களை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் திருச்சி மண்டல மேலாளர் சீனிவாசன் வணிக போட்டிகள் குறித்தும், மண்டல பயிற்சியாளர் மனோஜ் குமார் வருமான வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர். இறுதியில் கும்பகோணம் பிரிவு மேலாளர் நவீன் நன்றி கூறினார்.