கூத்தாநல்லூர்., ஜூன் 26
மனித சமூகத்தை சீர் கொடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது.
போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் தீமைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் மற்றும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பேரணியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் சார்பில் மது, போதை ,பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நடைபெற்றது.
அப்போது மது, சிகரெட் பழக்கத்திற்கு புகையிலை, போன்ற மனிதனை அழிக்கும் போதைப் பொருள்கள் எதிராகவும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க கையை உயர்த்தி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.