தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில் சங்க ஆண்டு அறிக்கை வரவு செலவு ஓத்துக்கொள்ளப்பட்டு சங்க வளா்ச்சிக்குாிய பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல ஆலோசனைகள் நடைபெற்றதில் தலைவா் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமாா் பொருளாளா் மரகதராஜ் ஆகியோா் பேசுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகையில் போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்து வருவதால் மாநகராட்சி சாா்பில் எல்லாப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறியப்பட்டு பல அமைப்புகளின் புகாா்களின் போிலும் அகற்றி வருகின்றனா்.

அதன்படி நமது சந்தை பகுதிகளிலும் இருக்கின்ற சில ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாாிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். அதன்படி முழு ஒத்துழைப்பு வழங்கி முழுமையாக துணை புாிந்து நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படு வோம் என்று பேசினாா்கள். பின்னா் சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினா்களுக்கு உழைப்பின் சிகரம் விருதும் உறுப்பினா்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி அடையாள அட்டை வழங்கப்பட்டது.


விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகா்கள் சங்க பேரவை மாவட்டதலைவர் சோலையப்பராஜா, பொருளாளா் ஆனந்தகுமாா், ஐக்கிய வியாபாாிகள் சங்க துணைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துணைச்செயலாளா்கள் கஷ்மீா், செல்வசேகா், உத்திரபாண்டி, கௌரவ ஆலோசகா் செல்வக்குமாா் சண்முகம் கதிரேசன் குருசாமி ஜோசப் நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் எட்வா்ட் வௌ்ளைச்சாமி காசிராஜன், செல்வக்குமாா் ஜெயராமா் திசைக்கரை ராஜா ராஜாசங்கா் கணேசன் ராஜ்குமாா் ஜான்சன் கணேசன் கருணாகரன் முருகேசன் பாலசுப்பிரமணியன் ரவிசேகா் அன்பழகன் இசக்கிமுத்து மற்றும் ஐக்கிய நாடாா் சங்க செயலாளர் செந்தில்குமாா் உள்பட வியாபாாிகள் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *