எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்ட்டம்.
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும்,மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும்,மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரியில் டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கண்டமங்கலம் இளங்கீரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தேர்தல் அறிவிப்பின்போது தற்போதைய முதல்வர் அறிவித்த அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி என்பதை உறுதி செய்யவும், சிறு,குறு விவசாயி என்ற பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகள் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்,
காப்பீடு நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், விவசாயத்தை விட விளையாட்டு கடினம் என கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்தும், விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாக கொச்சைப்படுத்தியதை கண்டித்தும், டெல்டா மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூம் ஆர்பாட்டத்தின் போது ஏர் கலப்பைக்கு மாலை அணிவித்தும், விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு அணிந்தும், மண்சட்டி ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்