கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் அப்போலோ மருத்துவமனை இதய சிகிச்சைத் துறையில் முதன்முறையாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘Siemens Artis one edition Xcath Lab’ (கேத் லேப்) திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வி.என்.சி. குழுமத்தின் தலைவர் வி.என்.சி.பாஸ்கர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி இந்த அதிநவீன கேத் லேப் வசதியை திறந்து வைத்தார்.அதிநவீன கேத் லேப் நிறுவப்பட்டதன் மூலம் கரூர் மற்றும் மற்ற மாவட்ட மக்களுக்கும் மேம்பட்ட அவசர இதய சிகிச்சைக்காகப் பொதுமக்கள் இனி சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவையில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதினரைத் தாக்கும் இதய நோய்மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்
தலைவர் டாக்டர்.ஸ்ரீதர் பேசியதாவது:
”தற்கால வாழ்க்கை முறை மாற்றங்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக,தற்போது இளம் வயதிலேயே பலரும் இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.புதிய கேத் லேப்பின் சிறப்பம்சங்கள்:
அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் டாக்டர் கேசவன் பேசுகையில்:
”கரூர் அப்போலோ மருத்துவமனையில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட கரோனரி ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ்மேக்கர் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட இதய சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Siemens Artis one edition Xcath Lab’ என்பது இதயம் மற்றும் ரத்த நாள சிகிச்சைக்குப் பொருத்தமான பல்துறை பயன்பாடுகளைக் கொண்ட நவீன கிராபிக் அமைப்பாகும்.இந்த வசதியின் மூலம் இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிய முடியும். இதனால் விரைவான சிகிச்சை குறைந்த தாமதம்,காலம் மட்டுமே மருத்துவமனையில் தங்கும் நிலை மற்றும் நோயாளி விரைவாகக் குணமடைதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.இந்தத் தொடக்க விழாவில் மருத்துவமனையின் முன்னணி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.