தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எஸ். கமலி குண்டடம் நால்ரோடு அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டடு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது
அது தொடர்ந்து தாராபுரம் அம்பேத்கர் நகரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பு வீட்டை அமைச்சர் கமலி ரிப்பம்பட்டி திறந்து வைத்தார் அமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர்மகேஷ் யுவராஜ் சிவகுமார் நகரசெயலாளர்கள் அபுதாஹீர் கதிரவன் சபரி ஒன்றியசெயலாளர் கமலஹாசன் ஆகியோர் நிகழ்விடம் முழுவதும் உற்சாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டு, கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் அமைச்சரை வரவேற்றனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கினர். அடிப்படை வசதி தேவைக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்