தஞ்சாவூர் மாவட்டம் ;கபிஸ்தலம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணா திருமண மஹாலில் நடந்தது.
விழாவுக்கு முன்னாள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்கத் தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினராக இரண்டாம் துணை ஆளுநர் கே ராஜன்புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிராமணம் செய்து நலத்திட்ட உதவிகளை அளித்து பேசினார்.
ஆளுநர் செயலாளர் சிவராமகிருஷ்ணன்,நிர்வாக ஆலோசகர் துரைசாமி,
மாவட்டத் தலைவர் மோகன்,வட்டாரத் தலைவர் குணசேகரன்,மண்டல செயலாளர் மாறன்,மண்டல பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர்
வாழ்த்தி பேசினர்.
.
புதிய தலைவர் அருணாச்சலம்,, செயலர் மகாராஜா, பொருளாளர் வீரமணி, நிர்வாக அலுவலர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
.பயனாளிகளுக்கு , 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வித் ஊக்கத் தொகை, 21 பேருக்கு 5 கிலோ அரிசி,10 பேருக்கு புடவை, ஒரு குடும்பத்திற்கான மாதாந்திர மளிகைப் பொருட்கள் மற்றும் 50 பேருக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
. இதில் சங்க இயக்குநர்கள், நிர்வாகிகள்,, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
.